Tuesday, July 21, 2009

என்னுள் அடங்காதவை.......


அதோ கரையின் முகவரி தேடி அலைகள்

மழையின் முகவரி தேடி வயல்கள்
காற்றின் முகவரி தேடி இலைகள்

உணர்வின் முகவரி தேடி செயல்கள்

மலையின் முகவரி தேடி முகில்கள்

கிளையின் முகவரி தேடி குயில்கள்

இதோ உன் இதய வானில் முகவரி தேடும் என் காதல் மேகங்கள்...
என்னில் அடங்காத என்னுள் நான் பாடும் ராகங்கள்!!!

Wednesday, July 8, 2009

காதல் உனர்வு


காதலால் இயங்குது உலகம்.
அளவு கடந்த சந்தோஷம் வரும்....
மனசை கவ்வும் அவ் வேதனை ஏன் என புரியாது....
காதல் அப்படித்தான்!

எங்கேயோ ஒரு காட்டுக்குள் கிடக்கிற ஒரு கல்
திடீர்றென ஒரு வீடுக்கு முதல் கல்லாவது போல்,
கோடிப் பூக்கள் கொட்டிக் கிடக்கிற வனத்தில்
ஒரு பூவைத் தேர்ந்தெடுக்கிற மனசு....
காதலுக்குத்தான் வாய்க்கும்.

காதலுக்கு திவ்யமான பக்கம் ஒன்று உண்டு.
யாரோ ஒருத்தருக்காக
தன் அத்தனை உறவுகளையும் உதறிவிட்டுப்
புதிய உலகத்துக்குள் பிரவேசிப்பது போலவே,
எல்லோருக்காகவும் அந்த உலகத்தையே உதறுவதும் கூட திவ்யம் தான்.

ஏனென்றால், காதல் என்பது ஒன்றை அடைதல் அல்ல...ஒன்றை உணர்தல்!!!