Wednesday, November 4, 2009

அஞ்ஞானி


கால ஆற்றில் ஓடி வரும் துடுப்பில்லா பரிசல் நான்....
போகும் திசை புரியாமல் பறந்து வரும் பறவை நான்....
நேற்று வரை எனை இந்த நேச விரல் தீண்டவில்லை...
தீண்டியப்பின் வந்த காயம் மருந்தாலும் ஆறவில்லை....
எழுதிவிட முடிந்தாலே இதயத்தின் சுமை குறையும்....
சொல்லிவிட முடிந்தாலே ஸ்வர்கம் என் பக்கம் வரும்....
அழ நினைக்கிறேன், அருகில் நீ இல்லையடா....
அகற்றிவிட நினைக்கிறேன் அந்தரங்க தொல்லையடா....
விதவிதமாய் தேன் உண்ண எண்ணியது இவ்வண்டு
பூஜைமலர் உனைக்கண்டு மாறியதேன் மனம் இன்று??
ஏதோ ஒரு அச்சில் இயங்குது இப்பூமி
காதல்லொன்று இல்லையெனில் இன்றும் நான்
"அஞ்ஞானி...."

No comments:

Post a Comment