Tuesday, January 19, 2010

அழுதுக்காட்டு


பிரிந்திருக்கும் காலங்களில்
என் நினைவுகள் இல்லாமல்
நீ கடந்திருக்கலாம்
அந்த சில மணித்துளிகளே
என் ஆயுளில் கழிக்கப்பட்டுருக்கும்
சாப மணித்துளிகள்.........

வெறுமைகளை
கர்ப்பமாக தரித்திருக்கிறேன்
நீ இல்லாத வலி வந்ததும்
பிரசவிக்கின்றன கவிதைகள்

கலங்கும் கண்களுக்குள்
தேங்கும் கண்ணீரில்
மிதக்க வேண்டும்
என் பிம்பமெனும்......
அதற்கேனும் அழுதுக்காட்டு

No comments:

Post a Comment