இதயமானலென்ன உயிரானாலென்ன
அதனால் உன்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்!!!!!!!!!!
----------------------------------------------------------------------------------
சத்தம் இன்றி முத்தம் கொடுத்து
மோகம் தீர்த்துக்கொண்டவனே
சத்தம் போட்டுக் கேட்கிறாய்
"நீ எல்லாம் ஒரு பெண்ணா? " என்று..............
----------------------------------------------------------------------------------
தென்றலாகத்தான் பார்த்தாய்
அது என்னை சூறாவளியாய் தாக்கி விட்டது
புன்சிரிப்பை நிவாரணமாய் கொடுத்தால்
குறைந்தா போய் விடுவாய்????
----------------------------------------------------------------------------------
சிகரெட் புகை இழுக்காதே
உனக்குள் இருக்கம் எனக்கு
மூச்சு திகைக்கிறது!!!!
----------------------------------------------------------------------------------
"ஆண் பூச்சூடுவதில்லை" என்ற உன் வாக்குவாதம்
வினோதமாக படவில்லையா?
அதுவும் உன் தோளில் நான் சாய்ந்து இருக்க......???
----------------------------------------------------------------------------------
எனக்கு வேண்டும் உன் இதயத்தில் சிறு இடம்
எதிர்ப்பாராமல் சந்தித்தால் உன் முகத்தில் சிறு புண்ணகை
முடிந்தால் என் நல விசாரிப்பு.
உன் மணமுடிந்த பின்பும் கிடைக்குமா எனக்கு - ஏக்கம்
----------------------------------------------------------------------------------
வலையில் தவித்தது வண்ணத்துப் பூச்சி
காப்பாற்றினேன்.
இது கருணையா?
சிலந்திக்கு செய்த துரோகமா?
----------------------------------------------------------------------------------
ஒரு பாதி கதவு நீ
மறு பாதி நான்........
பார்த்துக் கொண்டே பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க காத்திருக்கிறோம்!!!
----------------------------------------------------------------------------------
இறவில் ஒளிவிடும் உடலைப் பார்க்கும் வரை
தெரியாது எனக்கு
மின்மீன்கள் மின்னுவது காதலால் தான் என்பது........
----------------------------------------------------------------------------------
ஆதாம் கனவில் ஆப்பிள் துரத்துகிறது
ஆப்பிள் கனவில் பாம்பு துரத்துகிறது
பாம்பின் கனவில் சைத்தான் துரத்துகிறது
அனைவரின் கனவிலும் கடவுள் தோன்றி கூருகிறார் -
"காதலித்து கெட்டுபோங்கள்"
----------------------------------------------------------------------------------
நீ ஒருமுறை தான் பார்த்து விட்டுப் போனாய்
என் வீட்டு ஆளுயரக் கண்ணாடி
உன் நிழற்படமாகிவிட்டது!!!
----------------------------------------------------------------------------------
நீ என் மனதில் பூத்த பொழுது
முயற்சிகள் பட்டாம் பூச்சிகளாய் பறந்து விட்டது!!!!
----------------------------------------------------------------------------------
எனக்கு லீப் வருடங்கள் ரொம்ப பிடிக்கும்
ஏனெனில் அந்த வருடங்கள் தான்
இன்னும் ஒரு நாள் அதிகமாக வாழலாம் உன்னோடு!!!
----------------------------------------------------------------------------------
உனக்கும் எனக்கும் இடையே
வலி இல்லாமல் இதயமாற்று சிகிச்சை.....
----------------------------------------------------------------------------------
வழுக்கி விழுந்ததடா என் இதயம்
உன் மார்பள் விழிகளில்.........
----------------------------------------------------------------------------------
தொலைந்து போன நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை
கண்டுபிடிக்கும் நேரத்தில் நீ தொலைந்து போனாய்
----------------------------------------------------------------------------------
என் பெயரும் அழகாய் இருக்கிறது
உன் பெயரை பக்கத்தில் எழுதியதால்
----------------------------------------------------------------------------------
என் முத்தங்களை சேமிக்க பக்கி பேங்க் இல்லை
உன் இதழ்களை கொடு உண்டியலாக்கி கொள்கிறேன்
----------------------------------------------------------------------------------
பறக்கத் தெரியும் திசை தெரியாது
காதல் ஒரு இலவம் பஞ்சு..................
என்றும் அன்புடன்
ருத்ரா
No comments:
Post a Comment