உன் மெல்லிய புன்னகையின் சீண்டுதலால்
ந்ல்லுறவின் புதிய தொடக்கம் ஒன்றினை
நமக்குள் உருவாக்கிய
அந்த உன்னத நிமிடங்கள்...............
அருப்பத் தொடங்கிய காதலெனும்
இனிய நேசம் புதிய உலகின் நுழை வாயிலில்
நம்மை அழைத்து சென்று
பரவசப்படுத்திய அந்த பசுமையான நிமிடங்கள்........
என் மனக்கதவை திறந்த
உன் முன்னிலையில்
இயல்பாய் இருப்பதை கடினமாய்
நான் உணர்ந்த அந்த பரிதவிப்பு நிமிடங்கள்.........
தீண்டிய உனது அழகிய விரல்களில்
ஸ்பரிச சுகம் அள்ளி சொரியும் பூமழையை
என் இதயத்தின் மூலை முடுக்குகளில்
பொழிய வைத்த அந்த பொன்னான நிமிடங்கள்........
உன் மீது கொண்ட ஆதிக்க உணர்வினால்
நமக்குள்
பேசித்தீர்க்க முடியாத பிரச்சனைகளாய்
எழுந்த கோபங்கள்............
அப்பொழுது நாம் பகிர்ந்துகொண்ட பார்வைகளில்
அந்த மவுன நிமிடங்கள் .........
சில நாட்களுக்கு ஊடலை உல்லாச பயணம்
அனுப்பிவிட்டு ஐஸ்கிரீம் சுவையை ரசித்தபடி
நமக்குள் ஏற்பட்ட "மறப்போம் மண்ணிப்போம்"
ஒப்பந்த மாநாட்டின் அந்த இனிமையான நிமிடங்கள்............
ஒற்றை ரோஜாவை அனுதினம்
அன்போடு கைகளில் கொடுத்து
பின்னொருநாள் அப்பூக்களின் விலையாக
என் இதழ்களை விலை பேசத்துடித்த
உன் குரும்பு பார்வையின் அந்த உல்லச நிமிடங்கள்............
மறுதலிக்க முடியாமல் உன் அன்பில் - நான்
சிக்கிக் கொள்ள நேரிட்ட வேளையிலும் - நீ
கண்ணியம் காத்த அந்த கனிவான நிமிடங்கள்...........
இன்றும் என் இதயத்தில் குற்றால சாரலாய்!!!!!
என்றும் அன்புடன்
ருத்ரா
No comments:
Post a Comment