நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை
என் பெயர் ஆணவம் பிடித்தவள்.
தப்பென்றால் தட்டி கேட்ப்பவள்
தாமதிக்காமல் கண்டிப்பவள், நான் அகம்பாவக்காரி.
கடமையை செய்து, உரிமை கேட்பவள்.
என் பெயர் அடங்காபிடாறி.
அழகாய் பெற்றெடுத்து
அன்பாய் பெயர் சூட்டியபோதும்
சமூகம் எனக்களித்த பட்டங்கள் இவை.
பெண்ணியம் வரைப்பது பேச்சளவிளே
பெண் சுதந்திரம் பெயரளவிலே
ஒதுக்கீடு என்பது ஏட்டளவிலே
ஒதுக்கிவைப்பது நடைமுறையிலே.
நான் இப்பட்டஙகள் ஆள்பவள்
இதற்கென சட்டங்கள் செய்யுங்கள்!
No comments:
Post a Comment