Wednesday, January 20, 2010

வாழ்ந்திருப்பேன்


பின் தூங்கி முன் எழுந்து
முன் வாயில் கோலமிட்டு,
தேநீரோடு முத்தமும் தந்து
உன்னை எழுப்பி,
அவசரமாய் அலுவலகம் அனுப்பி வைத்து,
சமயலறையில் அம்மாக்கு உதவி செய்து,
அப்பாவுடன் செய்தித்தாள் வாசித்து,
நாத்தனாருடன் வம்புகளுடன் விளையாடி,
மாலையில் அவதியய் வரும் உனக்கு அன்பால் உபசரித்து,
அசத்தலாய் வாழ்ந்திருப்பேன்
நான் போட்டுக் கொண்ட வளையம் நம்மை
பிரிக்காமல் இருந்திருந்தால்

No comments:

Post a Comment