தெரியுமா??
நினைவுகளை மறுதலித்து மறந்து பட துடிதுடிக்கும்
எந்தன் அன்பே!
உன்னில் நானும் என்னில் நீயும்
உளமாற வாழ்ந்ததை மறப்பாயா?
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
மனமாற வீழ்ந்ததை மறப்பாயா?
எதிர்ப்பு பூத்ததை நெட்டி முறித்ததில்
நிலை குலைந்து இருபேரும் தடுமாறி
கரம் கோர்த்து எழுந்ததை மறப்பாயா?
எதை மறப்பாய்?
எந்தன் அன்பே எதைத்தான் மறப்பாய்?
மறக்க நினைப்பது தான்
நொடிக்கு நொடி நினைவில் வந்து கொல்லும்
தெரியுமா உனக்கு??
No comments:
Post a Comment