Wednesday, January 20, 2010

லட்சியம்


தன் லட்சியத்தைக் கூட மறந்து
எனக்காகவே வாழ்ந்தவனை
ஏளனம் செய்தவள் நான்.
நான் புறக்கனித்ததால்
- "அழகென்ற கர்வம் அவளுக்கு"
என்பார்கள் அவனது நன்பர்கள் என்னை.
துரோகியென்று தோற்றுகின்றனர் தோழிகள்.
இவர்களுக்கு எப்படி புரியவைப்பது
என் காதலை விட
அவனுக்கு லட்சியம் தான் பெரிதென்று
நான் நினைத்ததை..........

No comments:

Post a Comment