Wednesday, January 20, 2010

இன்றைக்கேனும்!!


மனசுக்குள் ஓர் இடம் எவரெஸ்ட் உயரத்தில்
எனக்கு பிடித்த நிறத்தில் உனது உடை!!
நான் ரசித்த கவிதை உன் நோட்டில்!!
என் பிடிவாதம் ஜெயிக்கும் விடாமுயற்சி!!
மனதுக்கு பிடித்தவை பட்டியலில்
முதலில் உன் பெயர்!!
கேட்காமலேயே என் பொருளை
எடுத்துப் பொகும் உரிமை!!
என்றேனும் சந்திக்க முதல் வார்த்தைக்காக
தடுமாரும் மனம்!!
எனக்கென்று வேண்டும் இத்தனையும்!!
கொடுத்ததும் பெற்றதும் நேசமென்று
என் முகவரி எழுதாக் கடிதத்தில் கொட்டிவிடு
முகமுடி கலைத்துவிடு
இன்றைக்கேனும்!!

No comments:

Post a Comment